🏠 / Tamil blogs / 11

ரீல்ஸ் பார்ப்பது என்ற பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

Sept. 9, 2025, 7:01 p.m. Share it on WhatsApp

👀 14 📍

இன்றைய காலத்தில் கவனம் (Attention) என்பது மிகப் பெரிய சொத்து. இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்கள் எல்லாம் உங்களை ஒரு விஷயத்திற்காகவே பயன்படுத்துகின்றன – உங்களை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டு இருப்பது.

ரீல்ஸ், ஷார்ட்ஸ் என்பவை சின்ன சின்ன பொழுதுபோக்கு வீடியோக்கள் போலத் தோன்றினாலும், உண்மையில் அது ஒரு மன அடிமைத்தனம் ஆகிவிட்டது.


ரீல்ஸின் மறைமுக வலை

நீங்கள் அந்த ஆப்ஸைத் திறக்கும்போது உண்மையில் நீங்கள் தேர்வு செய்வதில்லை. ஏற்கனவே அந்த ஆப்ஸ் உங்களை முந்தி நிற்கிறது. உங்களை கவரும் வகையில், முடிவில்லாமல் வீடியோக்களை காட்டிக் கொண்டே இருக்கும்.

  • நீங்கள் காமெடி பார்த்தால், இன்னும் அதிக காமெடியை காட்டும்.
  • வன்முறை, தாக்குதல் போன்றவற்றைப் பார்த்தால் அதேபோன்ற இன்னும் அதிக வீடியோக்களை தள்ளும்.
  • மெதுவாக, உங்களுக்குத் தெரியாமலேயே, அவர்கள் விரும்பும் திசையில்தான் உங்கள் மனநிலை மாறுகிறது.

இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், நீங்கள் கேட்காமல் உங்களைப் புரோகிராம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


வெற்றி யாருக்கு? உங்களுக்கா அல்லது சமூக வலைதளத்துக்கா?

ஒவ்வொரு நிமிஷமும் நீங்கள் ரீல்ஸ் பார்ப்பது, அந்த நிறுவனங்களின் சிஇஓக்கள் ஜேபில் பணமாக செல்கிறது.

  • அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்.
  • நீங்கள் கவனம் கலைந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள்.
  • அவர்கள் உங்கள் நேரத்தையும் கவனத்தையும் வென்றுவிட்டார்கள்.
  • நீங்கள் உங்கள் மனக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டீர்கள்.

சுருக்கமாகச் சொன்னால்: நீங்கள் அவர்கள் சொத்து சேர்ப்பதற்காக மறைமுகமாக உழைக்க அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பு. உங்களுடைய நேரமும் கவனமும் விளம்பரங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது.


இதனால் உங்களுக்கு ஏற்படும் விளைவுகள்

  1. கவனக்குறைவு – மூளை உடனடி மகிழ்ச்சிக்கு அடிமை ஆகிறது.
  2. நேர விரயம் – பல மணி நேரம் தெரியாமல் போய்விடுகிறது.
  3. சிந்தனை மாற்றம் – நீங்கள் பார்க்கும் உள்ளடக்கம் உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், நடத்தையையும் மாற்றுகிறது.
  4. உணர்ச்சி சோர்வு – பிறருடன் ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.

இது இனி பொழுதுபோக்கு அல்ல. இது மனப்பூர்வ கட்டுப்பாடு.


ரீல்ஸ் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது எப்படி?

1. சிபாரிசு வீடியோக்களைத் தவிர்க்கவும்

உங்களுக்கு காட்டப்படும் வீடியோக்களை பார்க்காதீர்கள்.
நீங்கள் உண்மையிலேயே தேடும் விஷயங்களை மட்டும் தேடிப் பார்த்து மகிழுங்கள்.

2. தெளிவான நோக்கம் வைத்துக்கொள்ளுங்கள்

சமூக வலைத்தளத்தைத் திறப்பதற்கு முன் உங்களுக்கே கேளுங்கள்:

  • நான் என்ன தேடப் போகிறேன்?
  • ஏன் இப்போதே திறக்க வேண்டும்?
    தெளிவான காரணமில்லையெனில் திறக்கவே வேண்டாம்.

3. நேரக் கட்டுப்பாடு அமைக்கவும்

உங்கள் மொபைலில் இருக்கும் Screen Time அம்சத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆப்பிற்கும் தினசரி வரம்பு வையுங்கள்.

4. பழக்கத்தை மாற்றுங்கள்

ரீல்ஸ் பார்க்கும் உந்துதல் வந்தால் அதற்குப் பதிலாக:

  • ஒரு புத்தகம் படிக்கவும்.
  • ஓர் அர்த்தமுள்ள ஆவணப்படம் பார்க்கவும்.
  • உங்களுக்கு தேவையான கல்வி வீடியோக்களைத் தேடி பார்க்கவும்.

5. அனுபவம் தராத பக்கங்களை அன்போலோ செய்யுங்கள்

அடிமை ஆக்கும் பக்கங்களைத் தவிர்த்து, உங்களுக்கு உண்மையில் உதவும் பக்கங்களையே பின்தொடருங்கள்.

6. விலைமதிப்பை உணருங்கள்

ஒரு வாரத்தில் ரீல்ஸ் பார்த்த நேரத்தை எழுதிப் பாருங்கள். அதை ஒரு வருடத்திற்குப் பெருக்கி பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்களை நினைத்துப் பாருங்கள். அதுவே உங்களை மாற்றத் தூண்டும்.


இறுதி சிந்தனை

ரீல்ஸ் உங்களின் மனதை சொந்தமாக்கிக் கொள்ள வடிவமைக்கப்பட்டவை. அதிகம் பார்த்தால், அடிமைத்தனம் அதிகரிக்கும்.

உண்மை என்னவெனில், தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் தப்பிக்க முடியாது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

அவர்கள் காட்டுவதை பார்க்காதீர்கள்.
 உங்களுக்கு தேவையானதை மட்டும் தேடி பாருங்கள்.

உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். மற்றவர்களின் பணக்காரத்தனத்திற்கு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

Last Updated on Sept. 9, 2025, 7:01 p.m.

📲 WhatsApp Share




மேலும் படிக்க...


𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧

👀 4908